Thursday, December 10, 2015

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும்சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளனஅதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால்உடல் எடை குறையும்அதுமட்டுமின்றிஉடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இங்கு பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நேச்சுரல் ஆன்டி-பயாடிக்
ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது

இரத்த அழுத்தம்
பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால்அது இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்
பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள்தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

இதய நோய்
பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்துஇதய நோய் வருவது தடுக்கப்படும்.

உடலை சுத்தப்படுத்தும்
வயிற்றில் புழுக்கள் இருந்தால்அதனை வெளியேற்றதினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால்உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிபுழுக்களும் வெளியேறிவிடும்.

சுவாச பிரச்சனை
பச்சை பூண்டு காச நோய்நிமோனியாநெஞ்சு சளிஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைப் போக்க உதவும்.

குறிப்பு
ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லதுபச்சையாக பூண்டு சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவதுஉடலின் வெப்பநிலை அதிகரிப்பதுதலை வலி ஏற்படுவது போன்றவை இருந்தால்உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

No comments: