Thursday, December 10, 2015

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்தால்அதற்கு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாதுஉடலில் தங்கியுள்ள நச்சுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி விட வேண்டும்.

நச்சுக்கள் உடலில் இருந்தால்அவை சருமத்தின் பொலிவை கெடுப்பதோடுஉடலில் வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்இதனால் உடல் சரும ஆரோக்கியம் மட்டுமின்றிஉடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

ஆகவே அழகாக.வும்ஆரோக்கியமாகவும் காணப்பட வேண்டுமெனில்உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வளியேற்றி விட வேண்டும்இங்கு வீட்டிலேயே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கெமிக்கல் சேர்க்கப்படாத காய்கறிகள்
இயற்கை உரங்கள் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட காய்கறிகளை சாப்பிட வேண்டும்இதனால் உடலில் நச்சுக்கள் சேர்வது குறைவதோடுஉடல் ஆரோக்கியமாகவும்சுத்தமாகவும் இருக்கும்.

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும்உதாரணமாககோடைக்கால பழங்கள் மற்றும் காய்கறிகளான மாம்பழம்மாங்காய்முருங்கைக்காய் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

பால்
பால் உடலுக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள்ஆனால் அது பாக்கெட் பாலே தவிரமாட்டுப் பால் அல்லஎனவே பாக்கெட் பால் அதிகம் குடிப்பதை தவிர்த்துமாட்டுப் பாலை தேர்ந்தெடுத்து குடியுங்கள்அதுவும் நன்கு காய்ச்சிசூடாக குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்
தினமும் காலையில் எழுந்ததும்வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றிதேன் சேர்த்து கலந்து குடித்து வரநச்சுக்கள் உடலில் சேர்வது தடுக்கப்பட்டுஉடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரே வகையான உணவு
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமானால்பத்து நாட்கள் தொடர்ந்து ஒரே வகையான உணவை உட்கொள்ளுங்கள்உதாரணமாகமதியம் கிச்சடி மற்றும் இரவில் வேக வைத்த காய்கறிகள் என்று பத்து நாட்கள் சாப்பிட வேண்டும்இக்காலத்தில் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்தக்கூடாதுஇப்படியே பின்பற்றி வரபத்தாவது நாளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

No comments: