Thursday, December 10, 2015

தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சளிஇருமல் அல்லது வேறு ஏதேனும் சுவாச பிரச்சனை இருந்தால் பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடிப்பார்கள்ஏன் என்று தெரியுமாஏனெனில் இது நல்ல நிவாரணம் வழங்கும்இதற்கு காரணம் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல்ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான்.அதுமட்டுமின்றிமஞ்சளில் மாங்கனீசுபொட்டாசியம்இரும்புச்சத்துவைட்டமின் பி6மக்னீசியம்வைட்டமின் சிநார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளதுஅதேப்போல் பாலில் பாஸ்பரஸ்புரோட்டீன்கார்போஹைட்ரேட்கால்சியம்நல்ல கொழுப்புரிபோஃப்ளேவின்வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 உள்ளதுஇவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த பானத்தைக் குடித்தால் பலன் கிடைக்காமலா போகும்
சளிஇருமல்
சளிஇருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகள் நீங்கள் சந்தித்தால்ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால்இப்பிரச்சனைகளுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்

இரத்தம் சுத்தமாகும்
உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை தினமும் சுத்தம் செய்ய நினைத்தால்பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்இதனால் மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால்இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுஉடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும்மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.

எலும்புகளை வலிமைப்படுத்தும்
பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும்எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும்வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்
நல்ல தூக்கம்
தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால்நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள்.
தலைவலி நீங்கும்
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள்சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போதுபாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதவிடாய் கால வயிற்று வலி
பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வரமாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்

எடை குறையும்
மஞ்சளில் உள்ள சேர்மங்கள்உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்துஉடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்

சரும அழகு
அதிகரிக்கும் முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால்ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்துசருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!
சாத்துக்குடி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தத்திற்கு நன்மை விளைவிக்கும் பழமாகும். மேலும் சாத்துக்குடி பசியை ஏற்படுத்தக் கூடியதுவயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும். மற்றும் இது செரிமானத்தை சரி செய்ய கூடியது,இதுப் போன்று சாத்துக்குடியால் நிறைய உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் சாத்துக்குடி வருடம் முழுதும் கிடைக்கும் பழம் என்பதால் நாம் எப்போது வேண்டுமானாலும் கடைகளில் வாங்கி உண்ணலாம். இனிதினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிக் காணலாம்....
சத்துக்கள்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச் சத்துவைட்டமின் சத்துக்கள்கால்சியம் சத்துநார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது

இரத்த விருத்தியாகும்
தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால்நல்ல தீர்வுக் காண முடியும்
எலும்புகள் வலுவடையும்
சிலருக்கு மிகவும் எலும்பு வலுவிழந்து இருக்கும். சிறிய அடிப்பட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். இவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால்எலும்பு வலுவடையும்
மலச்சிக்கல்
மலச்சிக்கல் அனைவரின் பெரும் சிக்கலாகும்தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
பெண்கள்
நாற்பது வயதை கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும்அவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால்இந்த தேய்மானத்தின் அளவை குறைக்க முடியும்

காலை வேளையில் தானியங்களை உணவாக எடுத்து வருவதன் முக்கியத்துவம்!!!

காலை வேளையில் தானியங்களை உணவாக எடுத்து வருவதன் முக்கியத்துவம்!!!

முழு தானிய உணவுகள் என்றால் என்ன?
தவிடு நீக்கப்படாத தானியங்களையே முழு தானியம் என்கிறார்கள்பல தானியங்களின் ஊட்டச்சத்துக்களே அவைகளை மூடியுள்ள தவிட்டில் தான் உள்ளதுதானியங்களை சுத்தரிக்கும் போது தவிட்டை நீக்கிவிட்டால் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.

முதன்மையான 10 முழு தானிய உணவுகள்
1. கோதுமை
2. பழுப்பு அரிசி
3. ஓட்ஸ்
4. பார்லி
5. சோளம்
6. கம்பு
7. சோளப் பயிர் வகை
8. கம்பு வகை
9. கேழ்வரகு
10. தினை

ரீஃபைன் அல்லது பதப்படுத்தப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் எவ்வகையில் சிறந்தது?
ரீஃபைன் செய்யப்பட்ட அல்லது சுத்தரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதுஅவைகளில் தான் அதிகமான நார்ச்சத்தும் உள்ளதுஇதனால் நம் செரிமான அமைப்புக்கும் அது நல்லதாக அமைகிறதுமுழு தானியங்கள் சுலபமாக செரிமானமாகும்அவைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் அதிகமாக உள்ளதுமேலும் புற்றுநோய்சர்க்கரை நோய்உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல நோய்களையும் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

அன்றாட உணவுகளில் அதிக முழு தானியங்களை சேர்த்துக் கொள்வது எப்படி?
ஒன்று அல்லது இரண்டு சப்பாத்திகள் இல்லாமல் எந்த ஒரு இந்திய உணவும் முழுமை பெறாதுஅதனால் முழு தானியங்களை உங்கள் சப்பாத்திகளில் இருந்து தொடங்குங்கள்சாதாரண மாவுக்கு பதிலாக முழு கோதுமைசோளம்கம்பு அல்லது கேழ்வரகு போன்ற அதிகப்படியான பயனை அளிக்கூடிய முழு தானியங்களை பயன்படுத்தி இனி சப்பாத்திகளை தயார் செய்யுங்கள்.

தானியங்கள் ஆரோக்கியமான காலை உணவுகள்
முழு கோதுமை ரொட்டிகள்ஓட்ஸ்கோதுமை ஃப்ளேக்ஸ்கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் தினை போன்றவற்றை ஆரோக்கியமான காலை உணவு தானியங்களாக பயன்படுத்தலாம்கம்பு தானியத்தில் செய்யப்பட ரொட்டிகளையும் கூட உண்ணலாம்முழு கோதுமை பிட்சா கூட இப்போது கிடைக்கிறதுஆனால் அவைகளை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை நன்றாக படித்து விட்டு பின் வாங்கவும்.

இட்லி
பழுப்பு அரிசி மற்றும் கேழ்வரகை கொதிக்க வைத்தோ அல்லது அவித்தோ அதிலிருந்து இட்லி ஊட செய்யலாம்.

பாப்கார்ன்
முழு கோதுமையில் செய்யப்பட்ட பாப்கார்ன் கூட ருசிமிக்கஆரோக்கியமான உணவாக அமையும்இருப்பினும்அதில் உப்புசர்க்கரை அல்லது பிற கொழுப்பு பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கோதுமை ஓட்ஸ்
இப்போதெல்லாம் கோதுமையில் கலக்கப்பட்ட ஓட்ஸ் அல்லது பிற முழு தானியங்களை கொண்டு கூட கேக்பேஸ்ட்ரி போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

கோதுமை பாஸ்தா
முடிந்தால் முழு கொழுமை பாஸ்தாவை கூட தேர்ந்தெடுங்கள்இருப்பினும் அவைகள் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றால் முழு கோதுமையுடன் ரீஃபைன் செய்யப்பட்ட பாஸ்தாவை முயற்சி செய்யவும்எந்த ஒரு உடல் எடை குறைப்பு திட்டத்தையும் கையில் எடுக்காமல் ஆரோக்கியமான பாஸ்தா சாப்பிடுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்தால்அதற்கு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாதுஉடலில் தங்கியுள்ள நச்சுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி விட வேண்டும்.

நச்சுக்கள் உடலில் இருந்தால்அவை சருமத்தின் பொலிவை கெடுப்பதோடுஉடலில் வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்இதனால் உடல் சரும ஆரோக்கியம் மட்டுமின்றிஉடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

ஆகவே அழகாக.வும்ஆரோக்கியமாகவும் காணப்பட வேண்டுமெனில்உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வளியேற்றி விட வேண்டும்இங்கு வீட்டிலேயே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கெமிக்கல் சேர்க்கப்படாத காய்கறிகள்
இயற்கை உரங்கள் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட காய்கறிகளை சாப்பிட வேண்டும்இதனால் உடலில் நச்சுக்கள் சேர்வது குறைவதோடுஉடல் ஆரோக்கியமாகவும்சுத்தமாகவும் இருக்கும்.

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும்உதாரணமாககோடைக்கால பழங்கள் மற்றும் காய்கறிகளான மாம்பழம்மாங்காய்முருங்கைக்காய் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

பால்
பால் உடலுக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள்ஆனால் அது பாக்கெட் பாலே தவிரமாட்டுப் பால் அல்லஎனவே பாக்கெட் பால் அதிகம் குடிப்பதை தவிர்த்துமாட்டுப் பாலை தேர்ந்தெடுத்து குடியுங்கள்அதுவும் நன்கு காய்ச்சிசூடாக குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்
தினமும் காலையில் எழுந்ததும்வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றிதேன் சேர்த்து கலந்து குடித்து வரநச்சுக்கள் உடலில் சேர்வது தடுக்கப்பட்டுஉடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரே வகையான உணவு
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமானால்பத்து நாட்கள் தொடர்ந்து ஒரே வகையான உணவை உட்கொள்ளுங்கள்உதாரணமாகமதியம் கிச்சடி மற்றும் இரவில் வேக வைத்த காய்கறிகள் என்று பத்து நாட்கள் சாப்பிட வேண்டும்இக்காலத்தில் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்தக்கூடாதுஇப்படியே பின்பற்றி வரபத்தாவது நாளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.