Thursday, December 10, 2015

ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்..

இட்லி
தமிழ்நாட்டில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் இட்லிஉலகளவில் மிகவும் சிறப்பான காலை உணவாக அறிவிக்கப்பட்டுள்ளதுஅதுமட்டுமின்றிஇட்லியை காலையில் சாப்பிடுவதால்உடலுக்கு வேண்டிய புரோட்டீன்நார்ச்சத்துகார்போஹைட்ரேட்அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும்இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும்

தோசை
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்று தோசைஇதில் புரோட்டீன்கார்போஹைட்ரேட் அதிகமாகவும்கலோரிகள் குறைவாகவும் உள்ளதுமேலும் இது எளிதில் செரிமானமாகக்கூடியதுஉடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை உணவும் கூட.

வெண் பொங்கல்
வெண் பொங்கலும் தமிழ்நாட்டில் காலை வேளையில் செய்து சாப்பிடும் ஒரு காலை உணவுஇதில் கலோரிகள் அதிகமாகவும்கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளதுஆகவே இதனை அவ்வப்போது காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பழைய சோறு
அக்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் பழைய சாதத்தை தான் பெரும்பாலும் காலை உணவாக எடுத்து வந்தார்கள்அதனால் தான் கடுமையாக உழைக்க தேவையான ஆற்றல் கிடைத்ததுமேலும் இன்றும் கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் காலை உணவாக பழைய சோறு தான் எடுத்து வருகிறார்கள்முக்கியமாக பழைய சோறு உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடுஉடலுக்கு ஆற்றலையும் வழங்கும்.

ராகி கூழ்

தானியங்களில் ஒன்றான ராகியைக் கொண்டு கூழ் செய்து காலை வேளையில் உட்கொண்டு வந்தால்செரிமான பிரச்சனைகள் தீரும்மேலும் ராகி கூழ் எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடுஉடல் எடையையும் குறைக்க உதவும்மேலும் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை உட்கொண்டால்கொலஸ்ட்ரால் குறையும்.

சுடு கஞ்சி
காலையில் ஒரு கப் கஞ்சி சாப்பிட்டால்நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்இதற்கு அதில் உள்ள கார்போஹைட்ரேட் தான் காரணம்அதிலும் ஜிம் சென்று உடல் தசையை அதிகரிக்க விரும்புவோர்காலையில் கஞ்சி குடிப்பது நல்லது.

கோதுமை ரவை உப்புமா
கோதுமை ரவையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால்இதனைக் கொண்டு செய்யப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமானதுமேலும் இது பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால்ஆரோக்கியமானது மட்டுமின்றிசுவையானதாகவும் இருக்கும்.

கம்மங்கூழ்
கம்பு கொண்டு செய்யப்படும் இந்த கூழ்உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும்மேலும் இதனை காலையில் குடித்து வந்தால்இதயம்செரிமானம் ஆரோக்கியமாக செயல்படுவதோடுபுற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.

இடியாப்பம் தேங்காய் பால்
இட்லியைப் போன்று ஆவியில் வேக வைத்து செய்யப்படும் இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளுள் ஒன்றுமேலும் இது பலருக்கும் பிடித்த காலை உணவும் கூடஇதனை உட்கொண்டால்செரிமான பிரச்சனைகள் ஏற்படாதுமேலும் விரைவில் பசி எடுக்க ஆரம்பிக்கும்.

No comments: